அந்நூர் பெண்கள் கல்லூரியில் பேச்சுப்போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமாக அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில், மாணவிகளின் பேச்சுத் திறனை வளர்க்கும் முகமாக பல்வேறு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தீனியாத், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவிகளின், – மக்களிடையே தூய குர்ஆன் – ஹதீஸ் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைக்க ஏதுவாக, பேச்சுப் பயிற்சி மற்றும் போட்டிகள் கடந்த 5.02.2011 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவருமான சகோ. ஜாஃபர் தலைமையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரியாத் TNTJ மண்டல செயலாளரும், அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாதின் தலைவருமான சகோ. ஃபெய்ஸல் அவர்கள் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மாணவிகள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.