அந்நூர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 3 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி குடந்தை A.M.திருமண மண்டபத்தில் 24.02.11 வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர் மற்றும் அந்நூர் சகோதரர்கள் கூட்டமைப்பு தலைவர் பைசல் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் துவக்க உரையை கல்லூரியின் தலைவர் A.ஷாஜஹான் அவர்கள் நிகழ்த்தினார். சிறப்புரையாக மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் S.S.U.சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கற்ற பின் நிற்க அதற்கு தக என்ற தலைப்பிலும், அந்நூர் சகோதரர்கள் கூட்டமைப்பு தலைவர் பைசல் அவர்கள் அந்நூர் மதரசா கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும், கல்லூரியின் தலைமை ஆசிரியை சபுர் நிசா ஆலிமா அவர்கள் தாவாவின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைப்பெற்றது. இதில் மேலான்மைகுழு உறுப்பினர் சகோ: பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து சென்ற கல்வி ஆண்டில் படிப்பு முடித்த 13 ஆலிமாக்களுக்கு பட்டமும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள் பங்கு வகித்தனர்.

இதில் ஆண்களும், பெண்களும் அறுநூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியின் இறுதியாக மதரசா பொருளாளர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.