அதிரையில் கந்தூரி விழாவை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம்

DSC00372 (1)DSC00368DSC00370தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெற்றுவரும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக நடுத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 15.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ஆகியோர் இணைவைப்பின் விளைவுகளை விளக்கி பேசினார்கள். மேலும், கந்தூரி திருவிழா ஊர்வலம் உங்கள் பகுதியில் வரும் போது அதை நீங்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கக்கூடியவர்களும் கலந்துகொண்டு, தவ்ஹீத் ஜமாத்தின் இந்த பணியை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது..