அதிராம்பட்டிணம் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

DSC00227DSC00243தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவில் உள்ள தர்காவில் நடைபெறவிருக்கும் கந்தூரி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் முகமாக கடற்கரை தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 10.01.2009 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்கள் ”இணைவைப்பின் பயங்கரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்களில் ஒருவரான அதிரை சாலிகு மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு ஆர்வர்த்துடன் உரையை கேட்டனர். பெண்கள் தங்களின் வீட்டு வாயிலில் அமர்ந்து உரையை கேட்டனர். இந்த தெருவில் தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்ய அந்த பகுதி ஜமாத் தடை செய்து இருந்தது. இந்த தடை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முலம் உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்