அதிராம்பட்டிணத்தில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் கடந்த 25.04.2010 முதல் 11.05.2010 அதிரை ‘மஸ்ஜிதுத் தவ்ஹீத்’ பள்ளியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி முகாமை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் மௌலவி முகம்மது நாசர் ஆகியோர் நடத்தினார்கள்.

பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12.05.2010 அன்று ‘மஸ்ஜிதுத் தவ்ஹீத்’ பள்ளியில் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்நூர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ரிஜ்வானா மற்றும் ஆயிஷா ஆலிமா ஆகியோர் உரையாற்றினார்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.