அதிராமபட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

DSC00386DSC00391DSC00387 (1)தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் கடந்த 13.02.2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றுது. இதில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மேலும் Y.அன்வர் அலி அவர்கள் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி ‘சத்தியத்தை மறைக்காதீர்கள்’ என்ற தலைப்பிலும், மௌலவி எம்.எஸ் சுலைமான் ‘இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியில், கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் எழுதிய மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.