அடங்கிப் போன ”குர்ஆனை எரிக்கும் பாதிரியார்!”

கடந்த சில தினங்களாக மேற்குலகில் உலா வரும் தலைப்புச் செய்தி, “குர்-ஆனை எரிக்கும் பாதிரியார்”. ப்ளோரிடாவில் உள்ள கெயின்ஸ்வில் நகரத்தில் உள்ள ஒரு 50 பேர் கொண்ட கிருத்துவக் கூட்டத்தின் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் வரும் செப்டம்பர் 11 அன்று குர்-ஆனை எரிப்பதாக அறிவித்து உள்ளார். இது போன மாதமே வெளியான செய்தி. ஆனாலும், தற்போது சூடு பிடித்திருப்பதர்க்குக் காரணம், உலகெங்கும் தற்போது நடைபெரும் போராட்டங்கள் மற்றும் இந்த செயல் அமெரிக்க படைகளின் ராணுவ வீரர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்ற ஆப்கானிஸ்தானின் அமெரிக்க படைத்தளபதிபதியின் பேட்டி.

இந்த இஸ்லாமிய விரோதப்போக்கிற்கு அமெரிக்காவில் உள்ள கிருத்துவ, யூத மற்றும் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை வாடிகனும் கண்டித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கெயின்ஸ்வில் நகரம் தடை விதித்திருந்தாலும், அதையும் மீறி செய்யப்போவதாக அறிவித்துள்ளார் இந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ். அது மட்டுமின்றி இதனால் ஏற்படும் செலவுகளுக்கு இந்த பாதியார் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் மற்ற செலவுத் தொகைக்கான ரசீது இவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது நகர நிர்வாகம்.

அமெரிக்காவின் பேச்சு சுதந்திரத்தை தவறாக இஸ்லாமிய விரோதப் போக்கிற்கு பயன்படுத்தப்படுவதாக பெருவாரியானவர்கள் குற்றம் சாற்றி உள்ளனர். இந்த இஸ்லாமிய குரோதப்போக்கை வெள்ளை மாளிகை அலுவலர்களில் இருந்து, உள்துறை அமைச்சர் கிளிண்டன் உட்பட பலரும் கண்டித்துள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக(ஒபாமாவின் கட்சி) மற்றும் குடியரசு (புஷ்ஷின் கட்சி) ஆகிய இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகயைக் கண்டித்துள்ளனர்.
http://www.msnbc.msn.com/id/39070172/ns/us_news-security/

அது மட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சர், ராபர்ட் கேட்ஸ் இவரிடம் இதை நிறுத்தும்படி பேசி உள்ளார். அதற்குப்பிறகு நிறுத்தி விட்டேன் என்று சொல்லி, சில மணி நேரம் கழித்து பிறகு, தள்ளிப்போட்டு இருக்கிறோம் என்று சொல்லி ஒரு நாடகத்தை நடத்தி வந்தார் இந்த பாதிரி. கடைசியாக திட்டமிட்டபடி செப்டம்பர் 11, அன்று நடத்தவில்லை என்று கூறி உள்ளார். http://www.bbc.co.uk/news/world-us-canada-11273678

இதனிடையில் ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த குர்-ஆன் எரிப்பு நிகழ்ச்சிக்கு எதிராக கெயின்ஸ்வில்லில் திரண்டு போராட்டம் நடத்தி உள்ளனர். நேற்று ஒபாமா வெள்ளை மாளிகையில் அளித்த அறிக்கையில், இந்த செயல், ‘இந்த நாட்டின் கொள்கைகளுக்கும் மற்றும் இந்த நாடு நிறுவப்பட்ட கொள்கைகளுக்கும் எதிரானது’ கடுமையாக கண்டித்துள்ளார்.
http://content.usatoday.com/communities/ondeadline/post/2010/09/obama-says-quran-burning-contrary-to-what-this-country-stands-for/1

இந்த குர்-ஆன் எரிப்பு இந்த பாதியாருடைய சர்ச்சுக்கு சொந்தமான தனிப்பட்ட இடத்தில் நடை பெறுவதால், இதை சட்டப்பூவமாக தடுக்க முடியாது. இது தனிப்பட்ட இடத்தில் நடப்பதால், இதை தடுப்பது, முதல் சட்டச் சீர்திருத்தத்திருத்த உரிமைக்கு (First Amendment Rights) எதிரான என்பது குறிப்பிடதக்கது.

இந்த பாதிரியார், டெர்ரி ஜோன்ஸ், முன்பு ஜெர்மனியில் இவரால் நிறுவப்பட்ட சர்ச்சில் இருந்து பொருளாதார முறைகேடு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டவர். (http://www.huffingtonpost.com/2010/09/08/quranburning-pastors-form_n_709878.html) கருப்பர்களை இழிவாக ஏளனம் செய்யும் வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது (http://www.loonwatch.com/2010/09/pastor-who-wants-to-burn-korans-uses-n-word/).

இறைவன் இந்த பாதியாரையும் அவரை ஆதரிக்கும் கூட்டத்தையும் நேர்வழிப் படுத்துவானாக

அமெரிக்காவில் இருந்து சிறப்புச் செய்தி…

எஸ். ஜாஃபர் அலி Phd