அஜ்மனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அஜ்மான் மண்டலம் சார்பாக அஜ்மான் மியுசியம் அருகில் உள்ள புதிய மர்கஸில் கடந்த வெள்ளிக்கிழமை (20.08.2010) அன்று ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் அஜ்மான் மர்கஸ் பொருப்பாளர் நாச்சிக்குளம் நைனா முகம்மது தலைமை தாங்கினார்கள்.

தாயகத்திலிருந்து வருகைத்தந்துள்ள சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நபி வழியைப் பின்பற்றுவதின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு அஜ்மான் நகரம் மற்றும் நயா ஸனையாப பகுதியை சேர்ந்த ஏராளமான தமிழ் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஜ்மான் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தினர்.