அஜ்மனில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அஜ்மான் மண்டலம் சார்பாக ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 03.09.2010 அஜ்மான் நயா ஸனையா பகுதியில் உள்ள பல்தியா பள்ளியில் நடைப்பெற்றது.

இதில் அஜ்மான் நயா ஸனையா பகுதி செயலாளர் சகோதரர் அரஃபாத் தலைமை தாங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகைத்தந்துள்ள மேலாண்மைக்குழ உறுப்பினர் சகோதரர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி ? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு அஜ்மான் நகரம் மற்றும் நயா ஸனையா பகுதியைச் சேர்ந்த ஏராளமான தமிழ் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஜ்மான் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.