அஜ்மனில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்

ajman_medical_mugam_3ajman_medical_mugam_2கடல் கடந்து வாழ்ந்தாலும் மார்க்க பணியோடு சமூகப்பணிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவதன் மற்றொரு அம்சமாக அமீரகத்தின் அஜ்மான் மண்டலத்தில் முதல் முதலாக ஒரு மாபெரும் இலவச மருத்துவ முகாம் 20.02.2009 அன்று நடந்தது.

அஜ்மான் அட்வான்ஸ்ட் மெடிகல் சென்டருடன் ஜமாஅத்துத் தவ்ஹீத் இணைந்து நடத்திய இம்மருத்துவ முகாமை துபை ஜமாஅத்துத் தவ்ஹீத் மருத்துவ அணி செயலாளர் சகோ.சாதிக் அலி ஒருங்கிணைந்தார். துபை செயலாளர்களில் ஒருவரான சகோ.முபாரக் ஒருங்கிணைப்பில் உதவி புரிந்தார்.

காலை 8 மணிக்கு தொடங்கிய முகாமில் 70 பேர் வரை இலவச சிகிச்சை பெற்றதுடன், இலவச மருந்துகளும் பெற்று பயனடைந்தனர்.

நோயாளிகளுக்கு மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் டாக்டர் கதிர்வேல் பாண்டியன் மற்றும் டாக்டர் மீனாட்சி ஆகியோர் சிறந்த முறையில் சிகிச்சையளித்தனர்.

முகாமில் நம் நாட்டவருடன் பங்களாதேசம், இலங்கை, நேபாளம் நாட்டவரும் பயனடைந்தனர். சிகிச்சை பெற்றோரில் இருவருக்கு இரத்த அழுத்தமும், 13 நபர்களுக்கு சர்க்கரை நோயும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததுடன், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கண்டனத்தில் கழிவு அளிப்பதாக அறிவித்து மனித நேயத்தை பறைசாற்றினர்.

மருந்துகளை Julphar மற்றும் Neo Pharmacy ஆகிய மருந்து கம்பெனிகள் மனமுவந்து வழங்கின.

அல்நஹ்தா கபீர், இஸ்மாயில், இலியாஸ் ஆகியோர் நோயாளிகளின் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் சோதனைகளையும், மருந்து வினியோகங்களையும் சிறந்து முறையில் செய்தனர்.

வாழ்வு வளம் பெற பொருளாதாரத்தை ஈட்ட கடல் கடந்து வந்தவர்களுக்கு குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை இம்முகாம் வழி செய்தது. எல்லாப்புகழும் வல்ல ரஹ்மானுக்கே !