அஅஜ்மானில் நடைபெற்ற ஒரு நாள் தர்பியா முகாம்

aj2aj1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அஜ்மான் கிளை சார்பாக கடந்த  26.02.2010 வெள்ளிக்கிழமை அன்று அஜ்மான் தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் மாலை 3 மணிக்கு தர்பியா முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சகோ.ஜாகிர் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கியது. பயிற்சி முகாம்களின் அவசியமும், அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் சகோ.ஜாகிர் அவர்கள் முன்னுரையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து சகோ.முஹம்மத் நாசர் அவர்கள் தொழுகை பயிற்சி அளித்ததுடன், தொழுகை சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

அஸர் தொழுகைக்கு பிறகு, இரண்டாவது அமர்வு நடைபெற்றது. இதில் இளம் பேச்சாளர் சகோ.ரபீக் அவர்கள் அனைவரும் அழைப்பாளர் ஆகுவோம் என்ற தலைப்பில் அழைப்பு பணியின் அவசியத்தையும், அழைப்பு பணி செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், செய்ய தவறினால் கிடைக்கும் தண்டனைகளை விவரித்ததோடு, அனைவரும் அழைப்பாளர்களாக ஆவதற்கு தேவையான பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.

மக்ரிப் தொழுகைக்கு பிறகு, இறுதி அமர்வில் தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமின் இப்ராஹீம் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகளை மிகவும் சிறப்பாக விளக்க, இறுதியாக துஆவுடன் பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.  எல்லாப் புகழும் வல்ல ரஹ்மானுக்கே !