அஜ்மனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

சத்திய மார்க்கத்தின் பிரச்சாரங்கள் வாரந்தோறும்; வியாழன் அன்று இரவு 9 மணிக்கு அஜ்மான் தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 28.01.2010 அன்று சிறப்பு நிகழ்ச்சியாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

தாயகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக மார்க்க விளக்கங்களை சகோ.பீ.ஜே தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரின் உடல் நலக்குறைவால் மாநிலத்தலைவர் சகோ.அல்தாபி அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் தெளிவான விளக்கங்களை தந்தார்கள்.

நேர்ச்சை செய்த நோன்பை வைக்க முடியாமல் போனால் என்ன செய்வது?

முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருந்து கொண்டு, இஸ்லாத்தைப்பற்றி தவறான கருத்துகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக தெரிவிப்பதை தடுக்க என்ன வழி?

மானியம் என்ற பெயரில் குறைந்த வட்டியில், அரசாங்கத்தால் தரப்படும் விவசாயக் கடனை பெறலாமா?

வங்கி தரும் வட்டியை பெற்றுக் கொண்டு தர்மம் செய்யலாமா?

ரொக்கத்திற்கும், கடனிற்கும் என தனித்தனியாக விலை நிர்ணயிக்கலாமா?

டிரஸ்ட் சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு
போன்ற பல விறுவிறுப்பான கேள்விகளுக்கு சகோ.அல்தாபி அவர்கள் பதிலளித்தார்கள்.

சகோ.அல்தாபி அவர்கள் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டது போல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு திருக்குர்ஆனில் வல்ல ரஹ்மான் விளக்கங்களை தந்துள்ளான்.

மார்க்க விளக்கங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளின் வாயிலாக சிந்தனை புரட்சியை தமிழகம் மட்டுமில்லாமல், உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. அதன் காரணமாக தான், தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் சார்பாக நடத்தப்படும் இணைய தளங்களிலும், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கேள்வி கேட்பதற்கு மக்கள் பெரும் ஆர்வத்தை காட்டுகின்றனர். எல்லாப் புகழும் வல்ல ரஹ்மானுக்கே !