அச்சன்புதூரில் இரு பிரிவினரிடையே மோதம் : களத்தில் இறங்கிய TNTJ

தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரில் கோவில் திருவிழாயில் சாமியடி மேளம் அடித்து முஸ்­லிம்கள் பகுதியில் நுழைவதை தடுத்ததால் இரு பிரிவினர்கள் மோதிக் கொண்டதில் இரண்டு முஸ்­லிம் உட்பட 3 பேர் மண்டை உடைக்கப்பட்டனர். பஸ், ஆட்டோ, வீடு, கடைகளை அடித்து நொறுக்கப்பட்டது.

களத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

உடனடியாக நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூரைச் சார்ந்த சுலைமான் அவர்கள் மாவட்ட தலைவர் யூசுப் அவர்களை தொடர்பு கொண்டு காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கச் சொன்னார். உடனடியாக மாவட்டத் தலைவர் நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் அவர்களையும் மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோரைத் தொடர்பு கொண்டு அச்சன் புதூரில் நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். உடனடியாக காவல் உயர் அதிகாரிகள் அச்சன்புதூர் விரைந்தனர்.

அதற்குள் கடலூரி­ருந்து மாறுதலாகி வந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தென்காசி டி.எஸ்.பி. ஸ்டா­லின் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். உடனடியாக, மாவட்ட தலைவர் யூசுப் அ­ அவர்கள்லின் அறுவுறுத்த­லின் பேரில் கடையநல்லூரி­ருந்து மாவட்ட துணைத் தலைவர் ஜபருல்லாஹ், நலத்திட்டச் செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது காசிம் ஆகியோர் இரவு 11 மணிக்கு அச்சன்புதூர் சென்று பாதிக்கப்பட்ட முஸ்­ம்களுக்கு ஆறுதல் கூறி கோபமாக உள்ள இளைஞர்களையும் முதியோர்களையும் அமைதிப்படுத்தினர்.

காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

அத்துடன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை குறிச்சி சுலைமான் தொடர்பு கொண்டு அச்நன்புதூரில் நடந்தவற்றை எடுத்துச் சொல்­லி முஸ்­லிம் பகுதிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். உடனடியாக, பீட்டர் அவர்கள் உளவுத்துறை டி.ஐ.ஜி ஜாபர் சேட்டை தொடர்பு கொண்டு போதுமான அளவு காவல்துறையை பாதுகாப்புக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

சரியாக இரவு 12 மணிக்கு மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் அவர்களும் 1 மணிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் அவர்களும் அச்சன்புதூர் வந்தனர். எஸ்.பி.யிடம் தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பிற அமைப்புகள் சந்தித்த போது இங்கு நடந்ததை உள்ளூர்வாசிகள் மட்டுமே என்னிடம் சொல்லுங்கள் என்றார்.

உடனடியாக, நமது ஜமாஅத்தைச் சார்ந்த மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் நடந்ததை தெளிவாக எஸ்.பி.யிடம் எடுத்துச் சொன்னார். இதைப் போல், எதிர் தரப்பினரையும் விசாரித்து விட்டு சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியள்ளித்தார்.

சப் கலெக்டர் தலைமையில் சமாதானக் கூட்டம்

08.05.2010 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் செங்கோட்டை டவுண் மஹால் மண்டபத்தில் வைத்து தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் செங்கோட்டை வட்டாட்சியர், தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்டா­ன் ஆகியோர் முன்னிலையில் 04.05.2010 அன்று அச்சன்புதூர் கோவில் திருவிழாவில் ஆதி திராவிட கொண்டாடும் போது இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குட்டித் தெருவின் வழியாக சென்று வழிபாடு நடத்தி விட்டு வருப தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முதல் இரண்டு கட்டமாக இரு பிரிவினரையும் தனித்தனியாக அழைத்துப் பேசி இறுதியில் தீர்வு காணும் வகையில் அச்சன்புதூர் ஆதி திராவிட மக்கள் மற்றும் அச்சன்புதூர் தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ­லியாகத் உட்பட இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் கூட்டாக நடத்திய சமாதானக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. ஏற்கனவே பிள்ளைமார்களுக்குச் சொந்தமான இடத்தில் பரம்பரையாக இருந்த பழைய கோவி­ல் வழிபாடு செய்ய இட உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளதால் மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அந்த தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஆதி திராவிடர்கள் வழிபாடு செய்யக் கூடாது என இஸ்லாமிய மக்கள் விடுத்த கோரிக்கையை ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டனர்.

2. அதே போன்று இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் குட்டித் தெரு வழியாக திருவிழாவின் போது சாமி வழிபாட்டிற்கு செல்ல மாட்டோம் என ஆதி திராவிட மக்கள் ஒப்புக் கொண்டனர்.

3. முட்டை, கோழி போன்ற காவு கொடுக்கும் நிகழ்ச்சிகளை புதிய கோவில் அருகிலேயே நடத்திக் கொள்கிறோம் என ஆதி திராவிடர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

4. காலை நேரங்களில் இஸ்லாமிய மக்கள் தொழுகை அழைப்பு (பாங்கு) செய்யும் போது ஒ­லி பெருக்கியை ஆதி திராவிட மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

5. இஸ்லாமியர்கள் தாங்கள் வசிக்கும் இடம் வழியாக ஆதி திராவிட மக்கள் செல்வதை எந்த விதத்திலும் தடை செய்ய மாட்டோம் என்று ஒருமித்த கருத்தில் தெரிவித்தனர்.

6. இது தொடர்பாக இனிமேல் எந்த விதமான பிரச்சனைகளும் இரு பிரிவினரும் செய்யமாட்டோம் என்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் ஒப்புக் கொண்டுள்ளனர் மேலும் இயல்பான வாழ்க்கையில் இரு பிரிவு மக்களும் சுமூகமாக இருப்போம் எனவும் ஒருமித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

களத் தொகுப்பு-குறிச்சி சுலைமான்