ஃபிரான்ஸில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை சார்பாக கடந்த 11/06/2011 அல்லாஹ்வின் அருளால் பெண்களுக்கான ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மூன்றாவது முறையாக நடத்தப்படும் ஆன்லைன் நிகழ்ச்சி என்பது குறிப்பிதக்கது.

இந்நிகழ்ச்சியில் மார்க்கம் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவர் பிஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆன்லைன் மூலம் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் பல பெண்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு சிறப்பித்தார்கள். இனியும் இதுபோன்ற நிகழ்சிகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் .

நிகழ்ச்சியின் நடுவே ஒரு கிருத்துவ சகோதரி கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று சென்றார் .

அவருக்கு பிரார்த்தனை (துஆ செய்யும் முறைகள் ) என்ற தலைப்பில் பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தினரால் தொகுக்கப் பட்ட பிரசுரம் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

மேலும் வந்திருந்த அனைவருக்கும் பிரார்த்தனை புத்தகம் வழங்கப்பட்டது.