TNTJ மூலம் ஏழை சிறுவனுக்கு ரூபாய் 4 லட்சம் மருத்துவ உதவி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சார்ந்த ஹாஜித் பாஷா என்வரது மகனுக்கு இரத்த புற்று நோய் ஏற்பட்டு அவரது சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து உணர்வு பத்திரக்கை tntj.net இணையதளம் போன்ற நமது ஊடகங்களில் மருத்துவ உதவி கோரி விளம்பரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் ரூபாய் 4 லட்சம் உதவித் தொகை கிடைக்கப் பெற்ற ஹாஜித் பாஷா அவர்கள் மாநில தலைமைக்கு கடந்த 26-2-11 அன்று நன்றி கடிதம் அனுப்பி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இல்லை என்றால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!