TNTJ கர்நாடகா மர்கசில் நடந்த மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

dscn0960dscn0959தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) அங்கமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் (KTJ) தலைமையகத்தில் வாரவாரம் TNTJ மார்க்க அறிஞர்களை கொண்டு வாராந்திர பயான் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 19.07.2009 அன்று பெங்களுரில் அமைந்துள்ள உள்ள KTJ தலைமையகத்தில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் TNTJ மாநிலச் செயலாளர் மௌலவி கோவை ரஹ்மத்துல்லாஹ் MISc, அவர்கள் கலந்து கொண்டு “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தமது உரையில் அழைப்பு பணியின் அவசியத்தை பற்றியும், அதனால் நமக்கு ஏற்படும் இம்மை/மறுமை நன்மைகள் பற்றியும், அழைப்பு பணியை புறக்கணித்தால் ஏற்படும் இம்மை/மறுமை தீமைகளை பற்றியும் மிக சிறப்பாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் 8:30 மணிவரை மக்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் மிக ஆர்வத்துடன் மார்க்க/சமுதாய சம்பந்தமான கேள்விகளை கேட்டு தமது ஐயங்களை போக்கி கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆறு வாரங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் வாராவாரம் அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது, அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பெங்களுர் மாவட்டம் KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர்.