TNTJ அலுவலகம் வந்த முத்தாரம் நிர்வாகத்தினர்: முத்தாரம் அலுவலகத்தை சூழ்ந்த முஸ்லிம்கள்!

29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ருந்தனர். இதை கண்டித்து இன்று சென்னையில் மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதை தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. 

இதை கேள்வி  பட்ட முத்தாரம் இதழ் நிர்வாகத்தினர் சுமார் மதியம் 12.30 மணி அளிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையதக்திற்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்ததோடு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம் அடுத்த வார இதழில் செய்தி வெளியிடுகின்றோம்,

இந்த வார பத்திரிக்கையை இனிமேல் விற்காத அளவிற்கு நிறுத்தி வைத்துக் கொள்கின்றோம்,

இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாமல் நன்கு கவனித்துக் கொள்கின்றோம் என உறுதியளித்தனர்.

பிறகு இதை எழுத்தூபூர்வமாகவும் எழுதிக் கொடுத்தவுடன் ஆர்ப்பாட்டம் வாபஸ்  பெறப்பட்டது!

ஆர்ப்பாட்டம வாபஸ் பேறப்பட்டாலும் உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களின் உருப்படத்தை வெளியிட்ட முத்தாரம் அலுவகத்தை நம் தவ்ஹீத் சகோதரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.


பிறகு அவர்களிடம் ”முத்தாரம் நிர்வாகத்தினர் மன்னிப் கோரி விட்டனர் மறுப்பு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர் என்பதை விளக்கி முத்தாரம் நிர்வாகத்தினர் அளித்த கடிதத்தை காண்பித்த” பிறகு கலைந்து சென்றனர்.