S.P.பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நூலக திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணத்தில் கிளை அலுவலகம் மற்றும் நூலகம் திறக்கும் நிகழ்ச்சி 03-03-2009 அன்று மாலை 4மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் ஸைபுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். சகோ:சிராஜ் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத்மன்டல பொருளாளர், இராமநாதபுரம், மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர்) அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், நிகழ்ச்சியில் சகோ:P.J அவர்கள் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார்கள்.


மஹ்ரிப் தொழுகைக்குப்பின் சகோ:P.J அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் நமது ஜமாஅத் ஆற்றி வரும் அரும் பணிகளை 4வகைகளாக பட்டியலிட்டார்கள்.

1.முஸ்லிமல்லாத மக்களிடம் நமது மார்க்கத்தை விளக்குவதற்காக ‘இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது. இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக தாஃவா சென்டர்கள் நடத்துவது, அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் (அபிடவிட்டு போடுவது, கெஸட்டில் பெயர் மாற்றுவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது).

2.பெயர் தாங்கி முஸ்லிம்களை உண்மை முஸ்லிம்களாக மாற்றுவதற்காக ‘இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, குர்ஆன் ஹதீஸ் வழியில் நடப்பவர்களாக அனைவரையும் மாற்றுவது.


3.அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)காட்டித்தந்த வழியில் ஸகாத், பித்ரா போன்றவைகளை வசூலித்து சரியான முறையில் வினியோகம் செய்வது, நமது மக்களுக்காக இட ஒதுக்கீடு, மற்றும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ஆட்சியாளர்களிடம் போராடி பெறுவது.


4. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)காட்டித்தந்த வழியில் நன்மைகளை ஏவி தீமைகளை தடுப்பது, நமது மக்களுக்கெதிராக நடக்கும் தீமைகளுக்கு எதிராக களமிறங்கி போராடுவது.