R.S மங்கலத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

rsmangalam_eliyamargam_1rsmangalam_eliyamargam_2rsmangalam_eliyamargam_3rsmangalam_eliyamargam_4அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் 06.03.2009 அன்றுமாலை தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம்மாவட்டம் R.S மங்கலம் கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாம்  ஓர்எளிய மார்க்கம் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுசெயளாளர் சகோ:அப்துல்ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சகோ:சிராஜ் அவர்கள் (தமிழ்நாடு தவ்ஹீஜமாஅத் ரியாத்மன்டல பொருளாளர்ரூ இராமநாதபுரம்மாவட்ட தவ்ஹீத்கூட்டமைப்பு தலைவர்) துவக்க உரைநிகழ்த்தினார்.

மஹ்ரிப் தொழுகைக்குப்பின் சகோ:P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அறிமுக உரைநிகழ்த்தினார் அதனைத்தொடர்ந்து கேள்விகள் முறையே ஆண்கள ;பகுதியில் ஒன்று பெண்கள் பகுதியில் ஒன்று எனத்தீர்மானிக்கப்பட்டு ஆரம்பமாக ஆண்கள் புறமிருந்து கேட்கத்துவங்கினர்.

துவங்கிய சிறிது நேரத்தில் ‘சுப்ஹானல்லாஹ்’ பெண்கள் கூட்டம் நாம் அமைத்திருந்த இருக்கைகள் நிறைந்து படிக்கட்டுகள் எல்லாம் அமர்ந்துவிட்டனர். வேறுசேர் போடுவதற்கும் இடம் இல்லாததால் ஒரு பகுதியில் இருந்த ஆண்களை நிற்கச்செய்துவிட்டு அங்கும் பெண்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மேல் சேர்போட முடியாததால் அதிகமான பெண்கள் நின்று கொண்டே கேட்க வேண்டியதாகிவிட்டது.மேலும் பெண்கள் கூட்டம் அதிகம் ஆகிவிட்டதால் கேள்விகள் பெண்கள் பகுதியில் இரண்டு , ஆண்கள் பகுதியில் ஒன்று எனமாற்றி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. முடிப்பதற்கு நாம் குறிப்பிட்டநேரம் இரவு 10மணி என்பதால் அதிகமானவர்கள் தங்கள் கேள்விகளுக்கும் பதில்அளிக்குமாறு கூறினர்.