சாலை விபத்து, ஆம்புலன்ஸில் உதவி நாச்சிகுளம் கிளை

கடந்த 22-05-2012 அன்று திருவாரூர் மாவட்டம், கரியாப்பட்டினத்தை சார்ந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை வந்து விட்டு பின்னர் திருப்பி செல்லுகையில் 5-30 மணியளவில் அம்மளுர் வேகத்தடையில் ஏறி இறங்குகையில் பின்னால் இருந்த கரியாப்பட்டினம் ஷேக் தாவுது அவர்கள் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்…)

மேற்க்கண்ட சம்பவம் நடைபெற்றதை அறிந்த நாச்சிகுளம் கிளை பொறுப்பாளர்கள் அம்மளுர் விரைந்தனர்.

பின்னர் கால்துறைக்கு தவகல் தெரிவிக்கப்பட்டு, தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரதே பரிசோதனைக்கு பின் உடல் கரியாபட்டினம் கொண்டு செல்லப்பட்டது.

மேற்க்கண்ட சம்பவம் நடைபெற்ற பகுதியில் அமைந்துள்ள வேகத்தடையானது எந்த வித அறிவிப்பு பதகையோ அல்லது வேகத்தடையின் மீது எச்சரிக்கை கோடுகள் எதுவும் இல்லாமையே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த விபத்திற்கு பிறகு அடுத்தனாலே அங்கு எச்சரிக்கை கோடுகள் இடப்பட்டுவிட்டது. ஒரு உயிரை கொடுத்தால் தான் நெடுச்சாலைதுறை இந்த நடவடிக்கையில் இறங்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.