குவைத் ஃபர்வானியா கிளையில் நடைபெற்ற 9 வது இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் தனது மார்க்க பணிகளையும் சமுதாய பணிகளையும் செய்து வருகிறது.

இது தமிழ் பேசும் சமுதாயம் அறிந்த ஒன்றே.

மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் 9 வது இரத்த தானம் முகாம் கடந்த 09-12-2011 வெள்ளியன்று மதியம் ஃபர்வானியா கிளையில் நடைபெற்றது.

இரத்த தான முகாம் மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிப்பு செய்திருந்ததால் 1 மணிக்கே சகோதரர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர்.

சுமார் 2.15 மணிக்கு இரத்த தான முகாம் ஆரம்பமானது.

நம் ஜமாஅத்தின் சமுதாயப்பணிகளை பல வகைகளிலும் பார்த்து வரும் பாஷா, ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நாசர் என்ற சகோதரர்கள் ஏற்கனவே லூலு சென்டருக்கருகில் ரமலான் பெருநாள் தொழுகை ஏற்பாடு கொடுத்தது போல் இந்த இரத்த தான முகாமிற்கான இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

இடத்தை மட்டும் கொடுத்தது இல்லாமல் நம் ஜமாஅத்தின் கிளை சகோதரர்களோடு சேர்ந்து முகாம் ஏற்பாட்டை சிறப்பாக செய்தனர்.

இதை பார்த்த இரத்த வங்கி மேலாளர், மருத்துவர் மற்றும் நர்ஸ்கள் அனைவரும் இது எங்கள் இரத்த வங்கியை விட வசதியாக இருக்கிறது என்று வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த இரத்தான முகாமில் மொத்தம் 185 பேர் இரத்ததானம் செய்தனர்.

மொத்தம் 250 க்கும் பதிவு செய்திருந்தாலும் நேரமின்மை காரணமாக சில பேர் இடையிலேயே சென்றுவிட்டனர் இதில் 172 பேரிடம் மட்டும் இரத்ததான முகாமில் இரத்தம் பெறப்பட்டது.

 

இந்த இரத்த தான முகாமில் சிறப்பம்சமாக 22 எகிப்தியர்கள் 17 இஸ்லாமல்லாதவர்கள் கலந்துக்கொன்டனர்.

இதில் 14 தமிழ் பேசும் மாற்று மத சகோதரர்களுக்கு சகோ பிஜே எழுதிய தமிழ் குர்ஆன் வழங்கப்பட்டது.

இதில் 2 மேற்குவங்காள மற்றும் 1 எகிப்திய மாற்று மத சகோதரர்களுக்கு அவர்கள் மொழியில் குர்ஆன் வழங்க கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த இரத்த தான முகாமை மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஃபர்வானியா கிளை சகோதரர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்தில் இரத்த தானம் செய்த தன்னார்வ தொண்டு அமைப்புகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிட விருதை பெற்றுள்ளதோ அதே போல் குவைத்தில் 2011 ம்ஆண்டு நடைபெற்ற இரத்த தான சேவையில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தான் முதலிடம்  என்பதை இரத்த வங்கி அலுவலர் சகோதரி ஆயிசா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடதக்கது.