ஜித்தாஹ்வில் ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, September 26, 2011, 20:20

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-09-2011 வெள்ளியன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் சார்பில் ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. பி.ஜெ அவர்கள் இணையதளம் வழியாக இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் 150க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கிளை சகோதரர்களும் நல் ஒத்துழைப்பு நல்கினர். புதிய விபரங்களை தெரிந்து கொண்ட சகோதர்கள் மேலும் இது போன்ற நிகழ்ச்சி நடத்துமாறு வேண்டுகோள் வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜெ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.