புதுமடம் கிளையில் பள்ளிவாசல் எழுப்ப வாரி வழங்கிடுவீர்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, June 9, 2011, 17:36

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் பல ஆண்டுகளாக நமது ஜமாஅத் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிலையில் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் பள்ளிவாசல் அமைத்து செயல்பட்டால் புதுமடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ஏகத்துவப்பிரசாரம் சிறப்பாக சென்றடையும் இதனால் 1767 சதுர அடி அளவுள்ள ஒரு இடத்தை விலைபேசி பதிவு செய்துள்ளோம் அதிலே மேல்தளமும் அமைத்துக் கட்டுவது உள்ளிட்ட அனைத்திற்கும் மொத்த செலவு ரூபாய் 38,00,000/- என மதிப்பிடபட்டுள்ளது.

எனவே அல்லாஹ்வின் பள்ளிவாயில் எழுப்புவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை செய்ய விரும்வோர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.