ரியாத் ஃபார்கோ கிளையில் சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 25, 2011, 17:58

ரியாத் மண்டலம் நியூ செனையா ஃபார்கோ கிளையில் கடந்த 19-01-2011 அன்று மார்க்க விளக்க கூட்டம் – பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல துணைத் தலைவர் சகோ. மௌலவி. பஷீர் அவர்கள் ‘வெட்கமும் இறையச்சமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்ததாக மண்டல இணை செயலாளர் அப்துர் ரஹ்மான் நவ்லக், ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் பணிகளையும் செய்ய இருக்கும் பணிகளையும் எடுத்துக் கூறி நமது பங்களிப்பு என்ன என்பதை விளக்கிக் கூறினார்.

ரியாத் மண்டல பணிகள் பற்றிய அறிவிப்புடன் கூட்டம் நிறைவுற்றது.