கோவை அறிவொளி நகரில் தஃவா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, December 6, 2010, 17:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 30-11-2010 அன்று அறிவொளி நகர் என்ற பகுதியில் தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் TNTJ மேட்டுப்பாளையம் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாமும் ஓரிறை கோட்பாடும் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மக்கள், இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு தமது ஐயங்களை போக்கிக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிளை தலைவர் முஸ்தபா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இறுதியாக தாவா செய்யப்பட்ட மக்களுக்கு கிளை செயலாளர் முஸ்தபா அவர்கள் குர்ஆன் மற்றும் CDக்களை இஸ்லாம் குறித்த சந்தேகங்களை மேலும் போக்கி கொள்வதற்காக வழங்கினார்.