ரியாத் – TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 3, 2010, 13:11

கடந்த 22.10.2010 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டலப் பேச்சாளர் மவுலவி சகோ. ரில்வான் ஸலஃபி அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, ரியாத் மண்டலம் நடத்தி வரும் பேச்சுப் பயிற்சி வகுப்பில்  பயிற்சிப் பேச்சாளராக உள்ள பத்தா கிளை துணைத் தலைவர் சகோ. அபுதாஹிர் அவர்கள் “நன்மை செய்வதில் ஆர்வம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மண்டலப் பொருளாளர் சகோ. சிராஜூத்தீன் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.