விஸ்வரூபம் விவகாரம் – சமரச பேச்சுவார்தையில் சுமூக தீர்வு – போராட்டம் வாபஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, February 3, 2013, 21:45

விஸ்வரூபம் விவகாரம் – சமரச பேச்சுவார்தையில் சுமூக தீர்வு – போராட்டம் வாபஸ்

முஸ்லீம்களையும், குர்ஆனையும் அவமதித்து விஸ்வரூபம் படம் எடுக்கபட்டதாக அந்த படத்தை பார்த்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர், அதை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்துறை செயலாளரை சந்தித்து படத்தை தடை செய்ய வலியுருத்தியது,
முஸ்லீம்களின் உணர்வுகளை மதித்து மாவட்ட ஆட்சியர்கள் படத்திற்க்கு 144 தடை உத்தரவு பிறபித்தனர். தமிழக முதலமைச்சர் அவர்கள் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி முஸ்லீம்கள் புண்படும்படி உள்ள காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அரசு சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

உள்துறை செயளாலர் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கமல்ஹாஸன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். படத்தில் 15 வைகையான மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. இதில் சர்ச்சைகுறிய 7 காட்சிகளில் மாற்றம் செய்வதாக கமலஹாஸன் ஒத்துகொண்டார், சில காட்சிகளை ஒலி இல்லாமல் ஒளிபரப்பவும் ஒத்துகொண்டார். சமசர பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. எழுத்துபூர்வமாக இருதரப்பும் உள்துறை செயலாளரிடம் உறுதி மொழி அளித்தனர்.

சமரச பேச்சுவார்த்தை நடத்த உதவிய தமிழக அரசிற்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நன்றியை தெரிவித்துகொள்கின்றது. சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் விஸ்வரூபம் திரைபடத்திற்க்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்த அனைத்து போராட்டங்களும் கைவிடப்படுகிறது. என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

இப்படிக்கு,
R.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்