இஸ்லாமியர்களோடு போர் தொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய கமலின் தீவிர(வாத) பக்தர்கள் – மதுரையில் அடுத்தகட்ட பரபரப்பு.

இஸ்லாமியர்களோடு போர் தொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய கமலின் தீவிர(வாத) பக்தர்கள் – மதுரையில் அடுத்தகட்ட பரபரப்பு.

விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத்திரைப்படத்தை ஓடவிடமாட்டோம் என்று டிஎன்டிஜேவின் மாநிலத் தலைவர் பீஜேஅவர்கள் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியை பேட்டியளித்த அன்றைய தினம்திரும்பத் திரும்ப சன் நியூஸ் சேனல் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது.

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, முஸ்லிம்களின் உணர்வுகளுக்குமத்திப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்தவுடன்ஆத்திரம் அடைந்த சில புல்லுருவிகள் மதுரை மாவட்டத்தில் ஒரு போஸ்டரைஒட்டினர்.

“எச்சரிக்கை” என்ற தலைப்பிட்டு ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், “விதைக்காதீர்கமல் மண்ணில் தீவிர வாதத்தை, தீவிரவாதத்திற்கு எதிராக இயக்கிய விஸ்வரூபம்திரைப்படத்தை எதிர்ப்பவர்களும் தீவிரவாதிகள்தான்.

நீங்கள் தீவிரவாதிகளா?

நிரூபிக்காதீர்கள் நீங்கள் தீவிரவாதிகளாக!

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல;

கமலின் தீவிர பக்தர்கள்.

இஸ்லாமிய சகோதரர்களே சிந்திப்பீர்!

இவண்:

கோழைகளாக வாழ்வதைவிட வீரர்களாக மடியத்துடிக்கும் கமலின் தீவிர பக்தர்கள். 80வது வார்டு, திரு.வி.க.சாலை, மதுரை மாவட்டம்” என்ற வாசகங்கள் அடங்கியபோஸ்டர்தான் அவர்கள் ஒட்டியது.

இஸ்லாமியர்களோடு நேரடியாக போர்த்தொடுக்கும் வகையில் அமைந்துள்ளஇந்தப் போஸ்டருக்கு மதுரை மாவட்ட டிஎன்டிஜே மரண அடி கொடுத்தது.

மரண அடி கொடுத்த டிஎன்டிஜேவின் போஸ்டர் :

கமலின் தீவிர பக்தர்கள் ஒட்டிய அந்த போஸ்டர் ஒட்டியுள்ள அனைத்துஇடங்களிலும் அதன் அருகிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் மதுரை மாவட்டம் சார்பாகஅன்றைய தினமே பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

தக்க முறையில் சந்திப்போம்:

தக்க முறையில் சந்திப்போம் என்ற தலைப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகஒட்டப்பட்ட போஸ்டர்கள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கமலின் தீவிர(வாத) பக்தர்களை தக்க முறையில் சந்திப்போம்.

இவண் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம்

என தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டு அடிக்கப்பட்ட இந்த போஸ்டர்கள்தீவிரவாத பக்தர்களுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்தசந்தேகமுமில்லை.

அதைத்தொடர்ந்து இதை இப்படியே சும்மாவிட்டால் சரிப்பட்டு வராது என்று கருதிநமது நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல்துறையிடத்தில் புகார் அளித்தனர்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, நேரடியாக போர் தொடுக்கும்தொனியில் போஸ்டர் அடித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்வகையில் இந்த போஸ்டர்களை ஒட்டிய தீவிர(வாத) பக்தர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று மதுரை மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

காரைக்குடியில் ஆட்டம் போட்ட பா.ஜ.க.:

அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து கமல் சொன்னஅவதூறுக்கு உரம் சேர்க்கும் வகையில் தீவிரவாதத்தின் ஒட்டுமொத்த குத்தகையைதன் கைவசம் வைத்துள்ள சங்பரிவாரக் கும்பல்களும் இதுதான் சாக்கு என்ற ரீதியில்முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரத்தில் குதித்தனர்.

கோயபல்ஸ் பொய்யர்களுக்கு பதிலடி:

சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்என்ற கோயபல்ஸ் தத்துவம் ஒன்றை மட்டுமே தங்களது முழுமுதற் கொள்கையாகவைத்து செயல்படக்கூடிய சங்பரிவாரக் கும்பலுக்கு காரைக்குடியில் தக்க பதிலடிகொடுக்கப்பட்டது.

ஷிண்டேயை பாராட்டுகிறோம்:

நாட்டில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களில் சங்பரிவார் கும்பலுக்கு உள்ளதொடர்பை அம்பலப்படுத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயைபாராட்டுகிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை நமது டிஎன்டிஜேநிர்வாகிகள் உடனடியாக காரைக்குடியின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டினர். இதன்மூலம் காரைக்குடியில் சங்பரிவாரர்களின் கொட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டது.