கமலின் விஷமரூபத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த முஸ்லிம்கள்!

நடிகர் கமல்ஹாஸன் நடித்து வெளிவரவிருந்த திரைப்படம் விஸ்வரூபம்.இந்தப்படத்தின் ட்ரைய்லர் காட்சிகளே இந்தப் படமானது முஸ்லிம்களைதீவிரவாதிகளாகச் சித்தரித்து, விஷமத்தை விதைத்து, பிறமத மக்களின்நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கும் திரைப்படம் என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டியது.

 அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக கமல் தனது இல்லத்தில் 23 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களிடத்தில் கடந்த 21.01.13 அன்று இந்தத்திரைப்படத்தை திரையிட்டுக்காட்டினார். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்நிர்வாகிகளுக்கும் திரையிட்டுக் காட்டினர்.

 படத்தைப் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கொதித்தெழுந்தனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இழிவுபடுத்தி இதுபோன்றதொருதிரைப்படம் இதுவரை இந்திய வரலாற்றில் வந்ததில்லை என்று அவர்கள் கருத்துக்கூறினர்.

டிஎன்டிஜேவின் அதிரடி அறிவிப்பு :

 முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், இறைவனின் இறுதி வேதமானதிருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வெளியிட்டால்மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநிலஅரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

 அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படத்தை தமிழகத்தில் எந்தத்தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்அறிவிப்பு செய்தது. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அதிரடி அறிக்கைபின்வருமாறு :

 விஸ்வரூபம் என்ற இந்தப் படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்குமுற்றாகத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது என்றஅறிக்கை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டவுடனேயே தமிழகத்தில் பரபரப்புதொற்றிக்கொண்டது.

அனைத்து மீடியாக்களையும் ஆக்கிரமிப்பு செய்த டிஎன்டிஜேவின் அறிவிப்பு:

 விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிடமாட்டோம் என்று டிஎன்டிஜே செய்தமேற்கண்ட அறிவிப்புகள் அடங்கிய அறிக்கையை அனைத்து செய்தித்தாள்களும்,செய்திச் சேனல்களும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன.

விஸ்வரூபம் ஓடாது: – பரபரப்பாக்கிய போஸ்டர் வாசகம்!

 அதைத்தொடர்ந்து, “விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது”என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் டிஎன்டிஜே சார்பாக தமிழகம் முழுவதும்ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில் இருந்த மேற்கண்ட வாசகங்கள் ஒட்டுமொத்ததமிழகத்தையும் பரபரப்புக்குள்ளாக்கியது.

உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை ஆணையாளருடன் சந்திப்பு:

 அதைத்தொடர்ந்து கடந்த 23.01.13 அன்று 23 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாகஅவற்றின் பிரதிநிதிகள் உள்துறைச் செயலாளர் ராஜகோபால், சென்னைகாவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து சமூகநல்லிணக்கத்தைக் கெடுக்கும் விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டும்என்று கோரிக்கை விடுத்தனர். இந்தச் சந்திப்பு மதியம் 12.45 மணியிலிருந்து 1.30 மணிவரை நடந்தது.

டிஎன்டிஜே சந்திப்பு:

 அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் கோவைரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக்ஆகிய மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் மதியம் 1.30 மணிக்கு தமிழகஉள்துறைச் செயலாளர் ராஜகோபால் மற்றும் ஆணையாளர் ஜார்ஜ் மற்றும்உயரதிகாரிகளைச் சந்தித்தனர்.

 மதியம் 1.30மணிக்கு துவங்கிய இந்தச் சந்திப்பு 2.30வரை நீடித்தது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால் தமிழகத்தில்மிகப்பெரிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணகாரியங்களுடன் விளக்கிக் கூறினர்.

 உணர்ச்சி வசப்பட்ட சிலரால் ஏதாவது பாதகம் ஏற்பட்டால் சட்டம் ஒழுங்குபாதிக்கும். அதுமட்டுமல்லாமல் எங்களது சமுதாயத்திற்கும் கெட்ட பெயர்ஏற்பட்டுவிடும். இதனால் முஸ்லிம் சமுதாயம்தான் பாதிப்புக்குள்ளாகும். சமூகநல்லிணக்கம் கெடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதைக்காட்டிலும் சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்பட்டால் அதனால் தமிழக அரசு பாதிப்படையும். எனவே இந்தத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய அமைப்பின் தலைமைப் பொறுப்பில்இருக்கக்கூடிய தலைவர்களுக்கே ஆத்திரமூட்டும் வகையில் இந்தப்படம்இருக்குமேயானால் இதைப் பார்க்கக்கூடிய பாமர முஸ்லிம்கள் எத்தகையகோபத்திற்கு ஆளாவார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இதனால் ஏற்படும் பின்விளைவுகள் மோசமானதாக மாறிவிடும். அதனால்எங்களுடைய உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.

 இயேசுவை திருமணமானவராக சித்தரித்து எடுக்கப்பட்ட டாவின்சி கோடு என்றதிரைப்படத்தை கிறித்தவ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு தடைசெய்தது. எப்படி கிறித்தவ மக்களது உணர்வுகளை மதித்து அந்த தடை உத்தரவைதமிழக அரசு பிறப்பித்ததோ அதைப்போல முஸ்லிம்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும்கோரிக்கை வைத்தனர். அதை மனுவாகவும் அதிகாரிகளிடம் டிஎன்டிஜே வழங்கியது.

 உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்தகவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாதுஎன்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்தச் சந்திப்பின்போது உணரமுடிந்தது.

முதல்வரின் துணிச்சலான துரித நடவடிக்கை:

 கொடநாட்டிலிருந்து சென்னை வந்த முதல்வரை உடனடியாக சந்தித்துநிலைமையின் விபரீதத்தை உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்எடுத்துச் சொன்னதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததமிழக முதல்வர் அவர்கள் விஸ்வரூபம் படத்திற்கு தடை போடும் உத்தரவைபிறப்பிக்க, உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் பறக்க, அன்று இரவே அனைத்துமாவட்டக் கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் விஸ்வரூபம் படத்தைதிரையிடுவதற்கு தடையாணை பிறப்பித்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான் பிரதானம்:

 முதல்வரது ஆலோசனையிலும், கலெக்டர்கள் போட்ட உத்தரவிலும் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்பதுதான்பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.

 “இந்த திரைப்படம் வெளியிடப்படு மேயானால் மிகப்பெரிய அளவில் சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இதற்கு முன்பாக வெடிகுண்டு வீசிய சம்பவங்கள்போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்”என்று டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் தங்களது கடிதத்திலும், உள்துறைச்செயலாளருடனான சந்திப்பின்போதும் சுட்டிக்காட்டிய அழுத்தமான வாதம்தான்முதல்வர் மற்றும் உளவுத்துறை மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கவனத்தோடுபார்க்கப்பட்டுள்ளது.

 அதைத் தொடர்ந்துதான், இந்தத் திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படும் என்று டிஎன்டிஜே சொன்ன அதே காரணத்தைச் சொல்லிமாவட்டக் கலெக்டர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை உத்தரவுபிறப்பித்தனர்.

களைகட்டிய நன்றி அறிவிப்பு போஸ்டர்கள்:

 முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு உடனடியாக இந்தஅதிரடி உத்தரவை பிறப்பித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி கூறி கீழ்க்கண்டவாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

தமிழக அரசுக்கு நன்றி!

 சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்குமதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்தநன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி! நன்றி! நன்றி!

 முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தைத் தடைசெய்த தமிழ்நாடு, ஆந்திரா அரசுகளுக்கும், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஸ்ரீலங்கா,மலேசியா ஆகிய நாடுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவண் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அதிரடியாகப் பறந்த தந்தி மற்றும் ஈமெயில்கள்:

 முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் இந்தப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும்தடை செய்தால் போதாது; ஒட்டுமொத்த இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவசரத்தந்தி மற்றும் ஈமெயில்கள் மூலமாகபாரதப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ஷிண்டே,தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி, லாலு பிரசாத் யாதவ்,முலாயம் சிங், மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டன.

மண்ணடியில் பொதுக்கூட்டம் அறிவிப்பு:

 முஸ்லிம்களுக்கு எதிரான இந்தச் சதிவலைகளை முறியடிக்கும் விதமாகவும்,இனியொருமுறை விஸ்வரூபம் படத்தைப்போல முஸ்லிம்களைச் சீண்டி யாரும்படம் எடுக்கக்கூடாது என்று எச்சரிக்கும் முகமாகவும், விஸ்வரூபம் படத்தைஆதரிக்கின்றோம் என்று சொல்லும் சாக்கில் இஸ்லாத்தை கருவறுக்கத் துடிக்கும்இஸ்லாமிய விரோதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் முகமாகவும், இலங்கைப்பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டத்தை கண்டிக்கும் சாக்கில்இஸ்லாத்தை இழிவுபடுத்துவோருக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவும் 27.01.13ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மண்ணடி தம்புச் செட்டித்தெருவில் மாபெரும்பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று டிஎன்டிஜே அறிவிப்புச் செய்தது.

புதுச்சேரியில் புஸ்வானமாகிய விஸ்வரூபம்:

 தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விஸ்வரூபம் புதுச்சேரியில் திரையிடப்படும்என்று பூச்சாண்டி காட்டினர்.

 உடனடியாக டிஎன்டிஜே புதுவை நிர்வாகிகள் களத்தில் குதித்தனர். புதுவையில்விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக் கோரி 23-1-2013 புதுவை முதல்வர்மற்றும் சீனியர் சூப்பரன்டெண்ட் ஆகியோரை நேரில் சந்தித்து நமது நிர்வாகிகள்புகார் கடிதம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஸ்வரூபம்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் இந்தஉத்தரவை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து புதுவையில் விஸ்வரூபம் வெளியாகும்என்ற கனவும் தகர்ந்து போனது.

கர்நாடகாவிலும் விஷம ரூபத்திற்கு இதே கதிதான்:

 கர்நாடகாவிலும் சுமார் 40 திரையரங்குகளில் இப்படம் வெளியிடத் தயாரானது.ஆனால் பல இடங்களில் அதற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்துசில திரையரங்குகளில் படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. பெங்களூர் லால்பார்க்சாலையிலுள்ள ஊர்வசி திரையரங்கில் இரண்டாவது நாளாக படம் திரையிட இருந்ததருணத்தில், காவல்துறை திடீரென வந்து படத்தினை நிறுத்த உத்தரவிட்டதைத்தொடர்ந்து படம் நிறுத்தப்பட்டது.

 பாலாஜி திரையரங்கில் படம் திரையிட இருந்த நேரத்தில் ஒரு கும்பல் திடீரெனதிரையரங்கினுள் நுழைந்து அடித்து நொறுக்கியது. இதில் ப்ரொஜக்டர் சேதமானது.

 சிமோகா மாவட்டம் பத்ராவதி அன்வர் காலனியிலுள்ள வாகிஷ் திரையரங்கில்படம் திரையிடப்பட இருந்தது. அப்போது ஒரு பிரிவினர் வந்து படத்தினைத்திரையிடக் கூடாது என்ற பிரச்சனை செய்தனர். டிக்கட் வாங்கி வரிசையில்காத்திருந்தவர்கள் படம் திரையிடக் கூறினர்.

 இது வாக்குவாதமாக மாறி, பின்னர் இரு தரப்பினரிடையிலான மோதலாகவெடித்தது. தொடர்ந்து அப்பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. திரையரங்குதாக்கப்பட்டது. பத்ராவதி பகுதி முழுவதும் கலவரம் பரவியதைத் தொடர்ந்து,காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் கலவரம் பரவாமல் இருக்க பாதுகாப்புக்காக காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட விஸ்வரூபம் வெளியான திரையரங்குகள்:

 விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என 23-1-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா மண்டலம் சார்பாக பத்திரிக்கை செய்திவெளியிடப்பட்டது.

 இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களைஇழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தைவெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்தியஅரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என அந்தசெய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி கேரள பத்திரிக்கைகளில்வெளியானது.

 கேரளாவில் மலையாள மொழியில் இந்தப் படம் வெளியாகவில்லை. அதேநேரத்தில் அங்கிருந்த சொற்பான தமிழ் கூறும் முஸ்லிம்களுக்குத்தான் இதன்விஷமத்தனம் வெளிப்பட்டது. ஆத்திரமடைந்த முஸ்லிம்களில் சிலர் விஸ்வரூபம்வெளியான தியேட்டரை அடித்து நொறுக்கியதும் பதட்டமான பகுதிகளில் படத்திற்குதடை செய்யப்பட்டது.