முதல்வரின் அறிவிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.

முதல்வரின் அறிவுரையை ஏற்று முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சு வார்த்தை நடத்தி இஸ்லாத்திற்கு எதிரான காட்சிகளை நீக்கினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது எதிர்ப்பை கைவிடும். என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வருக்கு இருந்த அக்கறையை அனைவரும புரிந்து கொண்டு இது குறித்த விமர்சனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ரஹ்மத்துல்லாஹ்

பொதுச் செயலாளர்.