ஆலோசனைக் கூட்டம் – ரியாத்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 18, 2013, 14:53

64ஆவது இந்திய குடியரசு தினத்தை (26.01.2013) முன்னிட்டு வருகின்ற 25ம் தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 22 வது இரத்ததான முகாமிற்கான ஆலோசனைக் கூட்டம் 18-01-2013 அன்று நடைபெற்றது.

ரியாத் மர்கஸில் நடந்த இந்த கூட்டத்தில் முதலில் மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள் உரையாற்றினார்கள்.
தொண்டரணி செயலாளர் சகோ.நூர் அவர்களின் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.