கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 14:43

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டலத்தில்,சனாயிய்யா பகுதியில் TNTJ வின் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி , “அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி” வளாகத்தில், 17-01-2013 வியாழன்  இரவு 8:30 க்கு ,மண்டல தலைவர்  டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

பிறகு,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “சுவனத்தை நோக்கி…” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் ஜமா’அத்தின் செயல்பாடுகளை விளக்கி விட்டு ,நன்றியுரை நவின்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

வந்திருந்த ஒவ்வொருவருக்கும் “ஜமா’அத் காலண்டர்,இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம்,வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? என்ற புத்தகம்,ஏகத்துவம் மாத இதழ்,கொள்கை விளக்கம் என்ற சி.டி ,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  டி.வீ.டி,ஏழு தலைப்புகளில் உரைகள் அடங்கிய டி.வீ.டி” ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 

Print This page