“தர்மத்தில் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்” – நியூ செனைய்யா கிளை சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 12:29

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நியூ செனைய்யா கிளை சார்பாக ஃபார்கோ வில்லா பள்ளிவாயிலில் கடந்த 16.01.2013 புதன் அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது.

அதில் சகோ: யூனுஸ் அவர்கள் “தர்மத்தில் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்”  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் சகோ. நஜ்முதீன், சகோ. நூர் (ஹனீஃபா), சகோ. கமால், சகோ. ஆசாத் முன்னிலை வகித்தனர்.

சகோ. அரசூர் ஃபாரூக் மண்டல, மாநில செய்திகளை விளக்கினார். கடும் குளிரிலும் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ரியாத் மண்டலத்தின் 22வது  இரத்த தான முகாம் குறித்தும், சென்னை புத்தக கண்காட்சி, போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததால் சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ், மாநிலம் வழங்கும் புள்ளி பட்டியல் ஆகிய செய்திகள் பதியப்பட்டன.