”இரவில் தனியாக ஒரு இளம் பெண்ணுடன் சுற்றிய பாய் பிரண்டை தான் முதலில் தூக்கிலட வேண்டும்” சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர்

டெல்லி மாணவியுடன் இரவில் தனியாக சுற்றிய பாய் பிரண்ட்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட வந்துள்ள 56 வயதுள்ள சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர் என்பவர் ”மாணவியை இரவு நேரத்தில் தனியாக அழைத்து சென்ற பாய் பிரண்டை தான் முதலில் துக்கிலிட வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்ததுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வக்கீல் மனோர் கூறுகையில் ”கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் எந்த பெண்ணும் நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நான் கேள்வி பட்டதில்லை, கொள்ளை கூட்ட தலைவன் கூட கண்ணியத்துடன் இருக்கும் பெண்ணை தொடமாட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாணவியின் பாய் பிரண்டின் காம உணர்ச்சியினால் தான் இந்த சம்பவமே நடந்துள்ளது. அவன் தான் அனைத்திற்கும் காரணம் அவனை தான் முதலில் தண்டிக்க வேண்டும் என வக்கீல் மனோஹர் கூறியுள்ளார்.