அல்-கோபர் கிளையின் அவசர இரத்த தான முகாம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 17, 2013, 21:17

அல்-கோபர் கிங் பஹத் மருத்துவமனை இரத்த வங்கியில் O மற்றும் A குரூப் இரத்தம் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் தம்மாம் மண்டல இரத்த தான பொறுப்பாளரை கடந்த 13.01.2013 சந்தித்து உடனே இந்த குரூப் இரத்தத்தை ஏற்பாடு செய்து தருமாறு  கேட்டுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து தம்மாம் மண்டல  அல்-கோபர்  கிளை நிர்வாகிகள் அன்றைய தினமே இரவு 6.30 முதல் 7.30 வரை சிறப்பு அவசர இரத்த தான முகாம் அறிவிப்பு செய்தார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தன்னார்வ தொண்டு கொடையாளிகள் மருத்துவமனையை நோக்கி படைஎடுத்தார்கள்.
 
குறைந்த அவகாசத்தில் ஏற்பாடு செய்த இந்த அவசர இரத்த தான முகாமில் O மற்றும் A குரூப் மட்டுமே அளிக்கவேண்டும் என்று நிர்வாகிகள் அறிவித்தார்கள். இதன் அடிப்படையில் 25 சகோதரர்கள் கலந்துகொண்டு 22 யூனிட்இரத்த தானம் வழங்கப்பட்டது. 

அல்-கோபர் கிங் பஹாத் மருத்துவமனை இரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர் யாசர் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இந்த மனித நேய பணியை பாராட்டினார்கள்.

மேலும் குறைந்த அவகாசத்தில் இந்த முகாமை ஏற்பாடு செய்து தந்த தகவலை  மருத்துவமனையின் முதன்மை அதிகாரியும் தம்மாம் உனிவேர்சிட்டி சைர்மனுமான டாக்டர் அப்துல்லாஹ் அல்-ரூபைஷ் அவர்களுக்கு தகவல் அளித்தார்கள் .

இதை அறிந்த அவர் உடனே இரத்த வங்கிக்கு வருகை தந்து  தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் குருதிக்கொடை அளித்தவர்களுக்கும்  தன்னுடைய நன்றியையும் பாராட்டுக்களையும்  தெரிவிதுக்கொண்டார்கள்..

இம்முகாமை மண்டல நிர்வாகிகள் மற்றும்  அல்-கோபர் கிளை நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். அல்ஹம்துலிலாஹ் .