மனிதநேய பணியில் ஒட்டன்சத்திரம் TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, January 6, 2013, 19:32

கடந்த 6.01.2013 ஞாயிறு அன்று காலை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமார்  67 வயது மதிக்கத்தக்க உமர் என்ற இஸ்லாமிய சகோதரர் அவர்கள் இறந்துள்ளார்கள்.

இதுபற்றி தகவல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளைக்கு மதியம் 3.30 மணியளவில் தெரியவந்ததும் , கிளை நிர்வாகிகள் காவல் துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் , விசாரணையில் சகோதரரின் சொந்த ஊர்  நத்தத்திற்கு அருகில் உள்ள கிராமம் என்று தெரிய வந்தது .

அதனால்  அங்கிருந்த ஜமாத்தார்களுக்கு இது பற்றி தெரியபடுத்தபட்டது . ஆனால் இவரைபற்றி தெளிவான தகவல் ஏதும் வராததால்   , நம் சகோதரர்கள் பொறுப்பேற்று காவல் துரையின் அனுமதி பெற்று , சகோதரர் உமருடைய ஜனாசாவை மீட்டு, தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தார்கள்