பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 6-1-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 06/01/2013 ஞாயிற்றுக்கிழமையன்று லெப்பைக்குடிக்காடு கிளை தவ்ஹீத் மர்கஸில் காலை 11:00 மணியளவில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,

மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர், புதுஆத்தூர், விகளத்தூர், முஹம்மது பட்டிணம், அம்பளவர்கட்டளை, அரியலூர், கொளக்காநத்தம், செந்துறை மற்றும்  செந்துறை கிளையை சேர்ந்த  கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டதிற்கு லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.