விமான டிக்கட் உதவி – கத்தர் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 2, 2013, 14:34

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில்  27-12-2012 வியாழன் அன்று,தாயகத்திற்கு செல்ல பண வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த  ‘இலங்கை- முரட்டுவை’ என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.அப்துல் கஃபூர்  (என்ற) சண்முகத்திற்கு ,இலங்கை செல்ல டிக்கெட் எடுக்க கத்தர் மண்டல ஜமா’அத் பண உதவி செய்தது.

இம்மனித நேய உதவியை ஜமா’அத் சார்பாக கத்தர் மண்டல துணைச் செயலாளரும்,இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளருமாகிய சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.அப்துல் கஃபூர்  (என்ற) சண்முகம் அவர்கள் கூறுகையில், ‘தான் இலங்கை சென்று தன் குடும்பத்தினர் அனைவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்க இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறும்’ நம்மிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறியது குறிப்பிடதக்கது.

Print This page