”21 ல் உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் செய்தற்காக நள்ளிரல் TNTJ நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து சென்னையில் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம்!

21 ஆம் தேதி உலகம் அழியும் என்ற மூட நம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ”21 ஆம் தேதி அன்று உலகம் அழியாது” என்ற விழிப்புணர்வு நோட்டிசை வெளியிட்டது. இதை தமிழகம் முழுவதும் உள்ள TNTJ கிளைகள் விநியோகம் செய்தது.

சென்னையில் இந்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னனியினர், ”முஸ்லிம்கள் மத கலவரத்தை தூண்டுகின்றனர்” TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டிஸ் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து, நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை கேவலமாக பேசி, அராஜகம் செய்து,நோட்டிஸ் விநியோகம் செய்த TNTJ நிர்வாகிகளை D1 காவல் நிலைய AC செந்தில் குமரன் கைது செய்துள்ளார்.

இதை கண்டித்து AC செந்தில் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி D1 காவல் நிலையம் முற்றுகை ஆர்பாட்டம் கடந்த 22-12-12 அன்று நடைபெற்றது.