குஜராத் தேர்தலில் பணம் கொடுத்து ஊடங்களில் செய்தி: பிரச்சனையை கையில் எடுத்த கட்சு! , மோடி கதி என்ன ?

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 20, 2012, 17:49

குஜாரத்தில் தேர்ததில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்தாகவும் பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனக்கு புகார் வந்ததும் இதை விசாரிக்க “உண்மை கண்டறியும் தனிக் குழுவை” அமைத்து அவர்களை இது குறித்து விரிவாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்சு உத்தரவிட்டுருந்தார்.

பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரித்து முதல் கட்ட தகவலை கடந்த 17-12-2012 அன்று கட்சு அவர்களிடம் தெரிவித்துள்ளது.

பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு அவர்கள் இது குறித்து கூறுகையில்:

”பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் பெருமளவு ஈடுபட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு குஜராத் தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது” என பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் என்னிடம் முதல் கட்ட அறிக்கை அளித்துள்ளார்.

எனினும் இந்த புகார் குறித்த முழுமையான அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அது விரைவில் என்னிடம் சமர்பிக்கப்படும், முழு அறிக்கை எனது கைக்கு வந்ததும், தேர்தல் ஆணையத்திற்கு ”பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்த அனைத்து அரசியல் வாதிகளின் கேட்டிடேட்களையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப் போகின்றேன். சமீபத்தில் உபி தேர்தலில் ரத்து செய்யப்பட்டது போன்று!

எனக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆனையத்திற்கு தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடமும் இது குறித்து பேசவிருக்கின்றேன் என தற்போது கட்சு கர்ஜித்துள்ளார்.

கட்சு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அவன் எவ்வளவோ பெரிய ஆளாக இருந்தாலும் அவனை ஆட்டம் காண வைத்து விடுவார் என்பது மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் விசயத்தில் அனைவரும் அறிந்ததே!

மோடி கதி என்னா ஆகப்போகின்றது எனத் தெரியவில்லை..

மோடியின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கப் போகி்ன்றதா? பொறுத்திருந்து பார்ப்பாம்!

Print This page