விட்டில் புகுந்து காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபன்! – உபியில் பயங்கரம்!

உத்ரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் இன்று காலை ஒரு வாலிபர் காதலியை வீட்டில் புகுந்து துப்பாக்கியால் சுற்று கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான பூஜா சர்மா என்ற பெண்ணை 28 வயது பிரசாந்த் என்பவர் காதலித்து வந்துள்ளார். பிசராந்த் பூஜா விற்கு தூரத்து சொந்தம் என்பதால் வீட்டில் அவ்வப்போது வருகையில் இருவருக்கும் பலக்கமாகி அது காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் பிரசாந்த் பூஜா விடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க பூஜா வின் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பல முறை பூஜாவை மிரட்டி பார்த்து பலன் கிடைக்காத பிரசாந்த் ”தனக்கு இல்லாதவள் எவனுக்கும் கிடைக்கக் கூடாது” என நினைத்து இன்று காலை தீடீர் என பூஜா வின் வீ்ட்டுக்குள் புகுந்து பூஜா வை கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியல் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூஜா உயிரிழந்தார். பூஜா இறந்தவுடன் அதே துப்பாக்கியால் பிரசாந்த் தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இரண்டு உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிடிஐ செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கு வந்த வாலிபனை வீட்டிற்குள் விட்டு தனது பிள்ளையுடன் பலகுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிந்த அந்த பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே அதை கில்லி எரிந்திருந்தால் தனது பிள்ளையை இழந்திருக்கும் நிலை அவர்களுக்கு வந்திருக்காது.

இந்த காதல் எனும் காம வெறி ஒரு உயிர் கொல்லி என நாம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றோம். அதற்கு இந்த சம்பவம் ஒரு நிதர்சன சான்றாகும்.

காதலிக்காக தனது உயிரையே கொடுப்பேன் அவள் மீது துசிபட்டாலும் அதை என்னால் தாங்க முடியாது என வசனங்கள் பேசும் காதலன் ஒரு கட்டத்தில் தனது காதலியின் உயிரையே எடுத்து விடுகின்றான். எங்கே போனது இவர்களது வீர வசனங்கள்.. இந்த பசப்பு வார்த்தைகளையெல்லாம் காதலர்கள் தங்களது காம பசியை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என்பது இது போன்ற சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.