தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம்! நவ 24 , 25 ஆஷுரா நோன்பு

பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிற்கு பிறகு தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிறை தென்பட்டதை அடுத்து நவம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் முதல் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆஷுரா நோன்பு :
அந்த அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.