நீளம் புயல் பாதிப்பு , நிவாரண பணியில் கடலூர் TNTJ

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை யில் நீளம் புயலின் வருகையால் கடும் மழை பெய்தது ,

இதில் பரங்கிபேட்டை யில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான டெல்லி சாஹிப் தெருவில் உள்ள சில குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது .

இதனால் அம்மக்கள் வீட்டினுள் வசிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர் ,,

உடனடியாக கடும் காற்றிலும் மழையிலும் அப்பகுதிக்கு சென்ற TNTJ நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அருகில் உள்ள TNTJ மர்கசில் வந்து தங்கி கொள்ளுமாறும் அவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார் ,

ஆனால் பொருள்களெல்லாம் வீட்டில் உள்ளது ஏதாவது காணாமல் போய்விட்டால் திருப்பி வாங்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை அதனால் கஷ்டமோ நஷ்டமோ இங்கயே தங்கி கொள்கின்றோம் என அவர்கள் கூறியதை அடுத்து அவர்கள் அனைவருக்கும் 31 10 2012 அன்று ரூ 2000 வழங்கப்பட்டது .

வருடா வருடம் பெய்யும் கடும் மழைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் தான் முதலில் வந்து உதவிகள் செய்கின்றனர் என அந்த மக்கள் நன்றியோடு கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!