லால்பேட்டை தீ விபத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1.1 லட்சம் உதவி

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 12/09/2012 புதன் கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் நிகழ்ந்த கோரமான தீ விபத்தில் 11 குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றிலும் எரிந்து தரை மட்டமாகின.

வீட்டில் இருந்த உடைமைகள் எதுவும் மீட்க இயலாது 11 குடும்பத்தினரும் நிர்கதியாகினர்.

பாதிக்கபட்ட குடும்பத்திற்கும் தலா ரூபாய் 10,000/- வீதம் 11 குடும்பத்திற்கும் மொத்தம் ரூபாய் 1,10,000/- கடந்த 29-9-2012 அன்று லால்பேட்டை கிளை சார்பாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடிம்பத்திற்கும் நிதி உதவியுடன் திருக்குர்ஆன தமிழாக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.