நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் திரைப்படத்தை கண்டிக்காத ஒபாமா , லிபியாவிற்கு 2 போர் கப்பல்களை அனுப்பியுள்ளார்!

உலகமு முழுவதும் இன்றைக்கு முக்கிய செய்தியாக பேசப்படுவதும் எகிப்து மற்றும் லிப்யா நாட்டு மக்களின் போராட்டம் தான். போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அமெரிக்க தூரங்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஒபாமா ”போராட்டம் மூர்கத்தனமானது” எனக் கூறி 2 கப்பல்களில் கப்பல் படையினரை லிப்யாவிற்கு அனுப்பியுள்ளார்.

போராட்டத்தையும் போராட்ட காரர்கர்களையும் கண்டிக்கின்றனரே தவிர போராட்டம் எதற்காக நடத்தப்படுகின்றது? அதற்கு காரணம் யார்? என்பது குறித்து யாரும் வாய்திறக்க வில்லை.

நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப் படுத்தி ஒருவன் படம் எடுத்துள்ளான்.

அதை நாடுமுழுவம் பரப்பி வருகின்றான்.

முஸ்லிம் மத்தியில் கொந்தெளிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதை அரபி மொழியில் டப் செய்துள்ளான்.

இந்த படத்தை தயாரித்தவனையோ அதை நீக்க மறுக்கும் Youtue ஐயோ யாரும் கண்டிக்க வில்லை.

மாறாக எரியும் நெருப்பில் எண்ணையையும் ஊற்றுவது போன்று இந்த திரைப்படத்திற்கு ஆலோசகராவும் உண்ணையை பரிசோதிப்பவராகவும் இருந்த ஸ்டெவ் க்ளைன் (Steve Klein) என்பவன் இந்த போராட்டம் குறித்து நிருபர்களிடம் கூறுகையில்..

”நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் உண்மைய கூறியுள்ளேன்! நான் உண்மையை தான் கூறியுள்ளேன்! தொடர்ந்து உண்மைய சொல்லிக் கொண்டு தான் இருப்பேன்”

என் தெரிவித்துள்ளான்.