தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவி – காரனோடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 12, 2012, 20:13

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் கடந்த 05/09/2012 அன்று புதன் கிழமை குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயினால் சேதமடைந்தது.

அனைத்தையும் இழந்திருந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு காரனோடை கிளை நிர்வாகிகள்  களப்பணியாற்றினார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உணவு பொருட்கள், பாத்திரங்கள், உடைகள் ஆகிய வற்றை வழங்கி உதவி செய்தார்கள்.