விபத்தில் காயமடைந்தவருக்கு ரூபாய் 4 ஆயிரம் உதவி – திண்டிவனம்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில் சார்பாக கடந்த 23.09.12  அன்று  “திண்டிவனம் ஹௌசிங் போர்டு’    பகுதியில் ஒரு வீட்டில் ஸ்டவ் வெடித்தது அதில்அபுதாகிர் என்பவருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது திண்டிவனம் கிளை நிர்வாகிகள் இதை அறிந்து உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு ஜமாத்தின் அம்புலன்சின் உதவியோடு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டதொடு கீழ்பாக்கம் கிளைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் அம்மருத்துவ மனைக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.மேலும் இவருக்கு Rs 4000/-  மருத்துவ உதவி வழங்கப்பட்டது.