குவைத் ரிக்கா பகுதியில் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு

கடந்த 23 -6 -2011 வியாழன் இரவு இஷா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் சார்பாக குவைத் ரிக்கா பகுதியில் உள்ள பெரிய ஜாமியா ஜும்மா பள்ளியில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பங்கேற்று தனி மனித ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை மண்டல தலைமையின் கீழ் ஃபாஹீல் கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்தனா. குவைத்தின் பல பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.