வலங்கைமான் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 18.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வரதர் தெற்கு மடவிளாகம் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் மறுமையில் வெற்றி பெற மார்க்கமா, சொந்த பந்தங்களா? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை செயலாளர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை செயலாளர் ஆசிக் அப்துல்லாஹ், துனை தலைவர் சித்திக், துனை செயலாளர் முஹம்மது ரியாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை மாணவரணி செயலாளர் முஹம்மது ஆசிக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.