லெப்பைகுடி காடு கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடி காடு கிளையில் கடந்த  18-06-2011 சனிக்கிழமை அன்று  லப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனை மற்றும் லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இம்முகாம் நடைபெற்றது. ஏழு பெண்கள் உட்பட 45 பேர்  இரத்த தானம் செய்தனர்.